இலங்கையில் சமையல் எரிவாயு கையிருப்பு இல்லாததால் நாடு முழுக்க சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் இலங்கையில் சமையல் எரிவாயுவிற்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, எரிவாயு நிரப்பக்கூடிய மையங்களில் மக்கள் பல நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சமையல் எரிவாயு கையிருப்பு தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நாடு முழுக்க சமையல் எரிவாயு வினியோகத்தை நிறுத்திவிட்டனர். நாட்டின் முன்னணி எரிவாயு நிறுவனம், புதிதாக கையிருப்பு வந்த பின் தான் எரிவாயு வினியோகம் தொடரும் என்று அறிவித்திருக்கிறது. தற்போது தொழிற்சாலைகளுக்கான எரிவாயு மட்டும் தான் கையிருப்பு உள்ளது.
சமையல் எரிவாயு வாங்க மக்கள் காத்திருக்க தேவையில்லை என்று அந்நிறுவனத்தின் தலைவரான விஜிதா ஹெராத் கூறியிருக்கிறார். மேலும், அடுத்த எரிவாயுவானது வரும் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமைகளில் வரும் என்றும் தெரிவித்துள்ளார்.