Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மிளகாய் பொடி தூவிட்டான்” அலறித் துடித்த பெண்… பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் மீது மிளகாய் பொடி தூவி 4 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் பண்ணகுப்பம் திருவள்ளுவர் நகரில் செல்வம் – குணசுந்தரி தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குணசுந்தரி தனது வீட்டில் தனியாக அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து குணசுந்தரியின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை திருடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனை அடுத்து அந்தப் பெண் கத்தி கூச்சல் எழுப்பியுள்ளார். அந்த சத்தத்தை கேட்டு அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து பார்ப்பதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இவ்வாறு  அந்த பெண் வீட்டில் தனியாக இருப்பதை கண்காணித்த மர்ம நபர் உள்ளே புகுந்து ஒரு லட்சம் மதிப்புடைய 4 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |