86 நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸை தொடர்ந்து பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. புதிதாக மாற்றமடைந்துள்ள வைரஸ் முன்பிருந்ததை விட வேகமாகவும் சற்று வித்தியாசமாகவும் இருக்கிறது. இதனால் பிரிட்டனில் சில நாடுகளுக்கு விமான போக்குவரத்து தற்காலிக தடைவிதித்துள்ளது.
அதுமட்டுமின்றி தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்தி வருகின்றனர். புதிய வகை தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் உலகம் முழுவதும் 86 நாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த டிசம்பர் மாதம் 63 சதவீதமாக இருந்த தொற்று பாதிப்பு ஜனவரி மாதம் 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதை தவிர மேலும் கூடுதலாக உருமாற்றம் அடைந்த இரண்டு புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.