இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களில் சச்சினை விட ரோஹித் சர்மா தான் சிறந்தவர் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் வெகுகாலமாக ஆரம்ப பேட்ஸ்மேனாக சச்சின் களமிறங்கி விளையாடியவர். அவருக்கு பிறகு ரோஹித் ஷர்மா 2013 லிருந்து தற்போது வரை தொடக்க வீரராக களத்தில் இறங்கி வருகின்றார். சச்சின் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தவர். ரோஹித் ஷர்மா மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைன் டவ்ல் சச்சினை விட ரோஹித் ஷர்மா தான் சிறந்த தொடக்க பேட்ஸ்மேன். இதுகுறித்து அவர் கூறுகையில், “ரோஹித் ஷர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் முன்னர் இருந்ததை விட சிறப்பானதாக உள்ளது. 90 ரன்களை தொடும் பொழுதும் எந்த ஒரு பதட்டமும் இன்றி விளையாடும் தனித்துவமான வீரர் ரோஹித் ஷர்மா. இந்தியாவைப் பொருத்தவரை தனிப்பட்ட முறையில் நான் ரோஹித் ஷர்மாவை தேர்வு செய்வேன்.
அனைத்து காலகட்டத்திலும் இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ரோகித் ஷர்மா தான் சிறந்தவர். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சினின் சராசரி 44 ஸ்ட்ரைக் ரேட் 88. ரோஹித் சர்மாவின் சராசரி 49 ஸ்ட்ரைக் ரேட் 88. எனவே நம்பர் அடிப்படையில் பார்த்தால் கூட சச்சினை விட ரோஹித் ஷர்மா சிறந்தவர். இதனடிப்படையிலேயே ரோஹித் ஷர்மாவை நம்பர் ஒன்றாக தேர்ந்து எடுத்து உள்ளேன். அதற்கு அடுத்த வரிசையில் விராட், எம்.எஸ்.தோனி வரிசையாக வருவார்கள்.