Categories
அரசியல் தேசிய செய்திகள்

SPG பாதுகாப்பு இல்லை…. ”பாஜகவின் பழிவாங்கல்” – அஹமத் படேல் சாடல் …!!

சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது பாஜகவின் பழிவாங்கும் நோக்கை காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமத் படேல் சாடியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர்கள், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினரை பாதுகாக்க எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு (Special Protection Group) வழங்கப்பட்டது.அந்த வகையில் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

Image result for SPG

இந்நிலையில், இதனை திரும்பப் பெறுவதாகவும், தொடர்ந்து அவர்களுக்கு Z பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. இந்த செய்தி காங்கிரஸ் கட்சியினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமத் படேல், ” பாஜகவின் இந்தச் செயல் அதன் பழிவாங்கும் நோக்கையே காட்டுகிறது. (எஸ்.பி.ஜி-யை விலக்கியதன் மூலம்) இரண்டு முன்னாள் பிரதமர்களின் குடும்பத்தின் பாதுகாப்பை சமரசம் செய்யப்பட்டுள்ளது” என விமர்சித்துள்ளார்.

Image result for SPG

சோனியா காந்தி குடும்பத்திற்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதன் மூலம், பிரதமர் மோடி மட்டுமே இனி அந்த சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |