நாடு முழுவதும் நவம்பர் 14-ஆம் தேதி(இன்று) குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். அன்றைய தினம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியரும், இந்த நாளை, குதூகலத்தோடு, குழந்தைகளை உற்சாகப்படுத்தி கொண்டாடுவர்.
சில சுவாரசியமான மற்றும் அழகான குழந்தைகள் தின கவிதைகள்:
1. கிழக்கே உதிக்கும் சூரியன் கூட
தோற்றே போகும்
நொடிக்கு நொடி உதிக்கும் குழந்தையின்
சிரிப்பின் முன்னால்
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
2. ஒரு புன்னகை பூமியில் சொர்க்கம் காட்ட முடியும் என்றால், அது நீங்கள் மட்டுமே!
ஒரு பார்வை அனைத்தையும் மாற்றி சொர்கத்தை கொண்டு வர முடியும் என்றால், அது உங்களால் மட்டுமே!
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
3.பள்ளிக்கு செல்லத் தொடங்கி விட்டாய், அழுகையையும் நிறுத்தி விட்டாய்!
ஆனால், இன்னும் ஏன் மனம் வரவில்லை, பொம்மைகளை விட்டு விட்டு, புத்தகத்தை கையில் எடுக்க!
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
4.ஆயிரம் கவலைகள் இருந்தாலும்,
ஒரே நொடியில் அவற்றை மறக்க வைத்து
அனைவரையும் சுலபமாக சிரிக்க வைக்க முடியும் என்றால், அது குழந்தைகளால் மட்டுமே முடியும்!
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
5.உலகில் எத்தனை
வர்ணங்கள் இருந்தாலும்
அத்தனையும் தோற்றுதான் போகின்றது
உந்தன் கரங்கள் முன்
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
6.குழந்தைகள் செய்யும்
குறும்புகளும் சுகமே
பெரியவர்களின் பார்வையில்
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
7.பல வருடம் வாழும் மனிதன்
அழுது கொண்டேபிறக்கிறான்
ஒரு நாள் மட்டுமேவாழும் பூக்கள்
சிரித்து கொண்டே பூக்கிறது…!
மழலையின் சிரிப்பும் தினமும் பூக்கும் பூக்களை போன்றது!
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
8.என்னை பிடிக்க முடியாது என்று சிரித்துகொண்டே
ஓடும் குழந்தையின் அழகு ஓர் அபூர்வம்…!
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
9.குழந்தைகள் எல்லாமே அவதாரங்கள் தான்
அவர்கள் போக்கில் நெறியோடு வளர்க்கும் போது, அவர்கள் மேன்மைப் பெறுகின்றார்கள்!
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
10.குழந்தைகளுக்கு மட்டுமே பொய்யாக சிரிக்க தெரியாது
அதனால் தான் குழந்தைகளை பார்க்கும்போது மட்டும் மனிதர்களால்
பொய்யாக சிரிக்க முடிவதில்லை…
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!