சிவகங்கையில் துணி கடையின் திறப்பு விழாவை முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு டீ_ஷார்ட் விற்பனை செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிதாக திறக்கப்பட்ட துணிக்கடையில் 1 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீ-ஷர்ட்டை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் புதிதாக துணி கடை திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு கடையில் நேற்று மக்களுக்கு மேக்ஸ் பிராண்ட் வகை டீ-ஷார்ட் தலா ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதனை வாங்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்ட நிலையில் முதலில் வந்த 599 வாடிக்கையாளர்களுக்கு தலா ஒரு ரூபாய்க்கு டீ- சர்ட் விற்கப்பட்டது. மேலும் ஆடை வாங்க திரண்ட கூட்டத்தை ஒழுங்குபடுத்த காரைக்குடி தெற்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .