முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவிற்கு ஒரு புது அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு திருமணம் ஆன பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த வண்ணம் உள்ளார். இந்நிலையில் அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட்டான பேமிலி மேன் சீரியஸின் இரண்டாவது பாகத்தில் சமந்தா நடித்துள்ளார். அதாவது மனோஜ் பாஜ்பாய்-பிரியாமணி ஆகியோர் இணைந்து நடித்த பேமிலி மேன் சீரியஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 12ஆம் தேதி முதல் ஃபேமிலி மேனின் இரண்டாவது பாகம் ஸ்ட்ரீமாக உள்ளது. இதனையடுத்து அமேசான் பிரைம் இதற்கான அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. அப்போது ட்விட்டர் சமந்தாவுக்கு என தனி எமோஜியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எமோஜியானது இந்திய நடிகைகளில் சமந்தாவிற்கு தான் முதன்முதலில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.