1983 ஆம் ஆண்டு வெளியான சகர சங்கமம் 1988 ஆம் ஆண்டு வெளியான ருத்ரவீணா போன்ற படங்களில் தனது பாடல் திறனை வெளிப்படுத்திய எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இந்திய தேசிய விருது கிடைக்கப் பெற்றது.
1981 ஆம் ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றார்.
1996 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு திரைப்படத்தில் “தங்கத் தாமரை மகளே” என்ற பாடலைப்பாடி தேசிய விருதை பெற்றார்.
2001 ஆம் ஆண்டு இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ விருதையும் 2011 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதையும் எஸ் பி பாலசுப்ரமணியம் பெற்றார்.
ஆந்திர அரசின் நந்தி விருதினை எஸ்பி பாலசுப்ரமணியம் 25 முறையில் தன்வசப்படுத்தியுள்ளார்
கேரள அரசின் 2015 ஆம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை எஸ் பி பாலசுப்பிரமணியமே பெற்றார்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 15வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் எஸ்பி பாலசுப்ரமணியன் இந்திய திரைப்பட பிரமுகர் விருதை பெற்றார்.