கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஸ்பெயினில் இதுவரை 5,812 பேர் பலியாகியுள்ள நிலையில் 72,248 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா (86) கொரோனா வைரசால் உயிரிழந்தார். பிரிட்டன் தலைநகர் பாரிஸில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானார்.
ஏற்கனவே பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜான்சன், பிரிட்டன் இளவரசர் சார்லஸ், கனடா பிரதமர் மனைவி சோபியா ட்ரூடோ மற்றும் ஈரான் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.