Categories
உலக செய்திகள்

விலங்குகள் காப்பகத்தில் பிறந்த…. 2 அரியவகை சிங்க குட்டிகள்…. பிரபல நாட்டு ஆய்வாளர்கள் ஆச்சரியம்….!!

ஸ்பெயின் நாட்டின் விலங்குகள் காப்பகத்தில் 2 அரிய வகை வெள்ளை நிற சிங்க குட்டிகள் பிறந்துள்ளன.

தெற்கு ஸ்பெயினில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 2 அரிய வகை வெள்ளை நிற ஆப்பிரிக்க சிங்க குட்டிகள் பிறந்தன. மேலும், பிறந்து 8 நாட்கள் ஆன ஆண் மற்றும் பெண் வெள்ளை சிங்க குட்டிகள் நேற்று முன்தினம் அண்டலூசியா பகுதியில் உள்ள மலை கிராமத்தில் இருந்து உணவு அளிப்பதற்காக சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டன.

இந்த வெள்ளை நிற சிங்க குட்டிகள் சாதாரண ஆப்பிரிக்க சிங்கங்களுக்கு பிறந்துள்ளது விலங்கியல் ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து உலகளாவிய வெள்ளை சிங்கங்கள் பாதுகாப்பு அறக்கட்டளை, “இந்த விலங்குகள் அல்பினோக்கள் இல்லை. இவை தென் ஆப்பிரிக்காவின் குரூகர் தேசிய பூங்காவில் உள்ள கிரேட்டர் திம்பாவதி பகுதியின் அரியவகை மரபணு” என்றும் கூறியது.

மேலும், கடந்த 1930 ஆம் ஆண்டுகளில் வெள்ளை சிங்கங்களை இனப்பெருக்கம் மற்றும் வேட்டைக்காக காடுகளில் இருந்து அகற்றி சிறைபிடித்தனர். தற்போது, கிட்டத்தட்ட 13 வெள்ளை சிங்கங்கள் மட்டுமே அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் வாழ்ந்து வருகின்றன. இதற்கு காரணம் தற்போதைய அறிவியலால் அவை வேறுபட்டது என்று அங்கீகரிக்கவில்லை என சட்டத்தால் பாதுகாக்கப்படாததே ஆகும். மேலும் வெள்ளை சிங்கங்களை பாந்தெரா லியோ என வகைப்படுத்தி உள்ளனர்.

Categories

Tech |