Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சொத்து பிரச்சனையில் போலீஸ் தலையிடுவதற்கு எதிர்ப்பு…!!

சொத்துப் பிரச்சனையில் போலீஸ் தலையிடுவதாக கூறி மயிலாடுதுறை காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தியவர்களை நள்ளிரவில் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் ஜெயக்குமார் குடும்பத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு தலையிட்டு பஞ்சாயத்து பேசியதோடு, மற்றொரு தரப்புக்கு ஆதரவாக மிரட்டல் விடுததால் ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினர் 21 பேர், மயிலாடுதுறை காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.

அவர்களை நள்ளிரவில் கைது செய்தபோது போலீசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதுதொடர்பாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது போராட்டம் நடத்தியவர்களின் குற்றச்சாட்டு. சொத்து பிரச்சினையில் தலையிடும் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

 

Categories

Tech |