தடையை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்ததோடு குட்கா மற்றும் பான்பராக் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள தம்பம்பட்டி பகுதியில் இருக்கும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான்பராக் ஆகியவற்றை விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்குள்ள பிரகாஷ் என்பவரின் கடைக்குச் சென்றுசோதனை செய்ததில் அவர் விற்பனைக்காக குட்கா மற்றும் பான்பராக் போன்ற பாக்கெட்டுகள் வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் பிரகாஷ் குட்கா மற்றும் பான்பராக் பாக்கெட்டுகளை ஒரு தோட்டத்தில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் பிரகாஷ் கூறிய தோட்டத்திற்கு சென்று நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான்பராக், குட்கா, போன்ற பொருட்களை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகு காவல் துறையினர் பிரகாஷ் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 101 மூட்டை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தடையை மீறி புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த குற்றத்திற்காக பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.