தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டுமென்று முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் , அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த அனுமதிக்க கூடாது என்று நான் சட்டமன்றத்திலே கேட்டேன். குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று முதலவர் எடப்பாடி பழனிச்சாமி சொன்னார்.
கடந்த 22ஆம் தேதி முதல்வரும் , துணை முதல்வரும் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் 2020 ஆம் தமிழகத்தில் நடைபெறும் NPR கணக்கெடுப்பில் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார். எதற்காக இப்படி ஒரு கடிதம் எழுதினார். ஆபத்து இருப்பதாக அவரே ஒப்புதல் தெரிவித்துள்ள்ளார்.
நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக மக்களிடம் முதலில் மன்னிப்பு கேட்கவேண்டும். எடப்பாடி இதை செய்வாரா ? செய்யமாட்டார். அப்படி செய்தால் ஜெயிலுக்கு போய் விடுவார். தன்னை காப்பாற்றிக்கொள்ள , தன்மீது இருக்கக்கூடிய வழக்குகளில் இருந்து தப்பித்துக்கொள்ள தான் இப்படி நடக்கிறார் என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.