உலகின் நம்பர்ஒன் பணக்காரரான எலான்மஸ்க், சமீபத்தில் சமூகவலைதளமான டுவிட்டரை $ 54.20 மதிப்புள்ள பங்குகளுடன் தோராயமாக 44 பில்லியன் டாலருக்கு வாங்கி இருக்கிறார். இது இந்திய மதிப்பில் ரூபாய்.3.30 லட்சம் கோடி ஆகும். இதையடுத்து 90 சதவீத இந்திய டுவிட்டர் ஊழியர்களை எலான்மஸ்க் பணிநீக்கம் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் டுவிட்டர் மிகவும் பொறுமையாக வேலை செய்கிறது என்று கூறியதற்காக எலான்மஸ்க் மன்னிப்பு கேட்டுள்ளார். அமெரிக்காவில் டுவிட்டர் ஒவ்வொரு 2 வினாடிக்கும் refresh ஆகிறது. ஆனால் இந்தியாவில் 10-20 வினாடிகள் ஆகிறது. மற்ற நாடுகளில் 30 வினாடிகள் ஆகிறது. இதனை விரைவில் சரிசெய்து விடுவோம் என்று எலான்மஸ்க் தெரிவித்துள்ளார்.