சூரியனில் இருந்துதான் பூமி ஆரம்பகிறது. சூரியன் இல்லையேல் நாம் வாழும் பூமியும் இயங்காது சூரியனை வழிபடுவது ஆன்மிகம் மட்டுமில்லை, ஆரோக்கியமும் கூட.
நம் நாடுகளில் இன்றும் பெருமளவு சூரியனை வழிபாடுதான் வருகிறோம். சூரியன் இல்லாமல் உலகம் இயங்குமா. இல்லை. பூமியின் தாயே சூரியன் தான்.
`சூரிய நமஸ்காரம்’ எனும் வழிபாடு ஆன்மிக உணர்வுக்காக மட்டுமன்றி ஆரோக்கிய விஷயத்துக்காகவும் பலராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதிகாலை சூரியனை வணங்கி அவனது ஆற்றலை நாம் பெற்றுக்கொள்வது என்பது பல வியாதிகளை நீக்கும்.
பல நாடுகளில் இன்றும் சூரிய வழிபாடு நடைபெறுகிறது. மேலும் சூரியபகவானுக்குக்கென்று அங்கு கோயில்களும் ‘சுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்குங்கள் என்பது நம் முன்னோர் மற்றும் சான்றோர்களின் வாக்காகும்.
வாழ்வின் அனைத்து நலன்களையும், வளங்களையும் சூரியன் பகவான் நமக்கு அருளுவார். வேதங்கள் சூரியனை ‘ஆயுளை வளர்க்கும் அன்ன ரூபம்’ என்று போற்றுகின்றன. நம்முடைய பழந்தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் தமிழகத்தில் ‘உச்சிகிழான் கோட்டம்’ என்ற பெயரில் சூரியபகவானுக்கான தனி கோவிலுகளும் இருந்துருகிறது.
சூரியன் வழிபாட்டை நம் முன்பு இருந்தே அதாவது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னாடியே வழிபாடு வருகிறோம். அதிலும் தை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் ‘பானுவார விரதம்’ இருந்தால், சூரியனின் அருளினைச் சிறப்பாகப் பெறலாம் என்பது ஆன்மிக நூல்கலீல் கூறப்பட்டிருக்கிறது.
அகிலத்தை காக்கும் ஸ்ரீமன் நாராயணன் மானிட வடிவெடுத்து ஸ்ரீராமனாக வந்தபோது, அவர் ராவணனைப் போரில் வெல்வதற்குத் துணைபுரிந்ததும் சூரிய பகவான்தான். ஆம், சூரிய வம்சத்தில் தோன்றிய ஸ்ரீராமரை ‘ஆதித்ய ஹிருதயம்’ எனும் சூரிய ஸ்தோத்திரம்தான் ராவணனை வெற்றிகொள்ளச் செய்தது என்று ராமாயணம் சொல்கிறது.
அதிகாலையில் தொடர்ந்து ஒன்பது முறை ஆதித்ய ஹிருதய மந்திரத்தை ஜபித்தால் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நடக்கும். தொடர்ந்து வெற்றிகள்ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் சூரிய பகவான் ஒவ்வொரு திருநாமம் கொண்டு நம்மைக் காத்துவருகிறார் என்று வேதங்கள் கூறுகிறது.
சித்திரை மாதத்தில் விஸ்ணு என்னும் திருநாமம் கொண்டு ஆயிரம் சூரியக்கதிர்களை வீசுகிறார். வைகாசியில் அர்யமான் என்னும் திருநாமம் கொண்டு ஆயிரத்து முந்நூறு கதிர்களை அனுப்புகிறார். ஆனி மாதம் விஸ்வஸ் என்ற பெயர் கொண்டு ஆயிரத்து நானூறு கதிர்களை கொடுக்கிறார் சூரியன்.
ஆடி மாதம் அம்சுமான் என்று ஆயிரத்து ஐந்நூறு கதிர்களைக் கொண்டிருக்கிறார். ஆவணி மாதம் பர்ஜன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரத்து நானூறு கதிர்களும்; புரட்டாசியில் வருணன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரத்து முந்நூறு கதிர்களுடனும் காட்சி தருகிறார். ஐப்பசியில் இந்திரன் என்னும் திருநாமம் சூடி, ஆயிரத்து இருநூறு கதிர்களால் ஜொலிக்கிறார்.
கார்த்திகை மாதத்தில் தாதா எனும் பெயர் கொண்டு கிட்டும். ஆயிரத்து நூறு கதிர்களை வீசுகிறார். மார்கழி மாதத்தில் சூரியநாராயணனாக ஆயிரத்து ஐந்நூறு கதிர்களைக் கொண்டுள்ளார். தை மாதத்தில் பூஷாவான் என்ற திருநாமத்தில் ஆயிரம் கதிர்களைக் கொண்டுள்ளார்.
மாசி மாதம் பகன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரம் கதிர்களை பரவச் செய்கிறார். பங்குனியில் துவஷ்டா என்ற பெயரால் ஆயிரத்து நூறு கதிர்களை அனுப்பி உலகைக் காக்கிறார் என்று வேதங்கள் சொல்கின்றன.