சூரிய தோஷத்தில் இருந்து விடுபட ஞாயிற்றுக்கிழமை தினத்தின் சூரிய பகவானை வழிபட்டு பரிகாரம் செய்வதன் மூலம் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று சூரிய பகவானை தரிசிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு நபரின் ஜாதகத்தில் பாதகமான சூரியதிசை நடப்பதாலும், சூரியனின் நிலை கெட்டிருந்தாலும் சூரிய தோஷம் ஏற்படும். அதோடு வயதான காலத்தில் தங்களது தந்தையை சரியாக பராமரிக்காமல் இருந்தாலும் தோஷம் ஏற்படும். இப்படி சூரிய தோஷத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, இதயம் மற்றும் கண் சம்மந்தமான நோய்கள் வரும். இதனையடுத்து சூரிய தோஷம் இருப்பவர்கள் கம்பீரம் இல்லாமல் தங்களின் தகுதிக்கு இணையான வேலையை செய்ய மாட்டார்கள். மேலும் பதவி உயர்வு பெறுவதில் பல்வேறு சிக்கல் ஏற்படும்.
இதற்கு பரிகாரமாக ஒரு ஞாயிற்று கிழமை தினத்தில் ஒரு வேளை உணவை தவிர்த்து விரதம் இருந்து, சூரிய பகவானின் மந்திரங்களை கூறி அவரை வழிபட வேண்டும். இதனையடுத்து சூரிய வம்சத்தில் பிறந்த ஸ்ரீ ராமரை தினமும் பூஜித்து வந்தால் சூரிய தோஷத்தில் இருந்து விடுபடலாம். ஒரு செம்பு நாணயத்தை சூரிய தோஷம் இருப்பவர்களின் தலையை மூன்று முறை சுற்றி தேய்பிறை ஞாயிற்றுக்கிழமையன்று ஓடும் ஆற்றில் வீசுவதாலும் பாதிப்புகள் குறையும். மேலும் சூரிய தோஷம் இருப்பவர்கள் கைகளின் செம்பு மோதிரமோ அல்லது வளையமோ அணிவதன் மூலம் பாதிப்புகள் குறையும். அதன் பின் இந்த நாளின் பசு மாட்டிற்கு உணவு அளிப்பதன் மூலம் தோஷ பாதிப்புகளில் இருந்து விடுபட்டு நற்பலனை அடையலாம்.