ராணுவத்தினரை கண்டித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் பத்து பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சூடானில் கடந்த திங்கட்கிழமை அன்று ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அமைச்சர்கள், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். மேலும் ராணுவத்தை கண்டித்து போராட்டம் நடத்தியவர்களை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக ராணுவ ஆட்சியை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்ததை பொறுத்துக் கொள்ள முடியாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் உரிமைகளுக்கு சூடான் ராணுவத்தினர் மதிப்பளிக்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.