Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் சந்தேகம் வந்துட்டு… மடக்கி பிடித்த பொதுமக்கள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கிருந்த சூடான் நாட்டு மாணவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணக்கம்பாளையம் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பெட்ரோல் வாங்க பணம் தந்து உதவுமாறு அங்கிருந்தவர்களிடம் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். இந்நிலையில் அந்த வாலிபரின் தோற்றத்தை பார்த்து சந்தேகம் அடைந்த பொது மக்கள் அவரை பிடித்து பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். இதனையடுத்து அந்த வாலிபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சூடான் நாட்டைச் சேர்ந்த முகமது அல் முமுன் காலித் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் 6 மாத கால விசாவுடன் கடந்த 2018-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஈச்சனாரி பகுதியில் தங்கியிருந்து அந்த வாலிபர் தனியார் கல்லூரியில் படித்துள்ளார்.

இதனையடுத்து தனது நண்பர்களை பார்த்து விட்டு இந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணக்கம் பாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது வண்டியில் பெட்ரோல் தீர்ந்து விட்டது. இதனால் அந்த பகுதியில் இருந்தவர்களிடம் இந்த வாலிபர் பெட்ரோல் வாங்க பணம் கேட்ட போது பொதுமக்கள் அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இவர் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தங்கியிருந்ததால் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |