Categories
உலக செய்திகள்

“போடு!”… கொரோனாவால் லாபம் பார்த்த வீடியோ கேம் நிறுவனங்கள்… பிரபல நிறுவனத்தின் பிளான்…!!!

சோனி நிறுவனம் சுமார் 26,600 கோடி ரூபாய்க்கு ஹேலோ மற்றும் டெஸ்டினி வீடியோ கேம்களை தயாரித்திருக்கும் நிறுவனத்தை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரனோ தொற்றால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கில் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. எனவே வீடியோ கேம் துறை பல மடங்கு வளர்ச்சி கண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச அளவில் வீடியோ கேம் துறையில் 11 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகளும் ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மட்டும் சோனி நிறுவனமானது, சுமார் ஆறு வீடியோ கேம் தயாரிக்கக்கூடிய நிறுவனங்களை வாங்கியிருக்கிறது. இந்நிலையில், ஹேலோ மற்றும் டெஸ்டினி ஆகிய வீடியோ கேம்களை தயாரித்த நிறுவனத்தையும் வாங்கியிருக்கிறது.

Categories

Tech |