டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. மேலேயும் கொரோனா தடுப்பு பணி, லடாக் எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
காணொலி மூலம் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக மத்திய அரசு வெற்று நிதியுதவி திட்டத்தை அறிவித்துள்ளது என சோனியா காந்தி கூறியுள்ளார். கொரோனா காலத்தில் ஏழைகளின் கைகளுக்கு நேரடியாக பணம் செலுத்த வேண்டும். இந்த இக்கட்டான சூழலிலும் பெட்ரோல், டீசல் விலையை அரசு தொடர்ந்து உயர்த்துகிறது என சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.