Categories
மாநில செய்திகள்

ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் சோனியா காந்தி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்துள்ள நிலையில் சோனியா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக தொண்டர்களும், தமிழக மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சோனியா கேட்டுக்கொண்டுள்ளார். சோனியா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்தும் திமுக ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் நாட்டு மக்கள் விரைவில் கொரோனா பதிப்பில் இருந்து விரைவில் மீள்வார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 200 நாடுகளுக்கு பரவி உயிர்களை காவு வாங்கிய வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசால் 68 பேர் உயிரிந்துள்ள நிலையில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |