குடிக்க பணம் தராததால் 70 வயது தாயை தண்டசோறாக வீட்டில் இருந்த மகனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதி அருகே உள்ள குலத்து முக்கு கிராமத்தைச் கிராமத்தில் வசித்து வருபவர் இசக்கியம்மாள். வயது 70. கணவனை இழந்து தனியாக வாழும் இவர் மீன்களை தெருத்தெருவாக விற்கச் சென்று அதில், வரும் வருமானம் மூலம் தனது வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார். இவருடைய இளைய மகனான மாரியப்பன் என்பவரும், இசக்கியம்மாள் மனைவியை விட்டு பிரிந்து வேலைக்கும் செல்லாமல், தான் சம்பாதிக்கும் பணத்தில் குடித்துவிட்டு தண்டச்சோறாக வீட்டில் இருந்து வந்துள்ளார்.
தாயும் தன் மகன் தானே என சகித்துக்கொண்டு கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்து வந்துள்ளார். இவ்வாறு அடிக்கடி பணம் கேட்டு அவரது தாயை மாரியப்பன் தொந்தரவு செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மது குடிக்க பணம் கேட்டு உள்ளார் மாரியப்பன். அதற்கு ஊரடங்கு காலத்தில் ஏற்கனவே சோற்றுக்கே வழியில்லாமல் இருக்கிறோம். இந்த நேரத்தில் மீன்களும் விற்பனையாகவில்லை. வருமானத்துக்கும் வழி இல்லை எனவே பணம் தர முடியாது என்று அவர் கூற, ஆத்திரமடைந்த மாரியப்பன் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து தாயின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழக்க, சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மாரியப்பனை பிடிப்பதற்குள், அவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். பின் இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், தப்பியோடிய மாரியப்பனை கைது செய்தனர்.
ஓரிரு மணி நேர போதைக்காக பெற்றெடுத்து இத்தனை ஆண்டுகாலம் வளர்த்தது மட்டுமல்லாமல், வயது முதிர்ந்த நிலையிலும், வேலைக்குச் சென்று வேலைக்குப் போகாத மகனை பார்த்து வந்த தாயை இரக்கமே இல்லாமல் மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.