பாலிவுட் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருப்பவர் மலைக்கா அரோரா. இவருக்கு கடந்த 1998-ம் ஆண்டு அர்பாஸ் கான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 20 வயதில் தற்போது அர்ஹான் கான் என்ற மகன் இருக்கும் நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு மலைக்கா தன்னுடைய கணவரை விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இந்த விவாகரத்துக்கு பிறகு கடந்த 4 வருடங்களாக நடிகர் அர்ஜுன் கபூரை மலைக்கா காதலித்து வருகிறார். நடிகர் அர்ஜுன் கபூர் தமிழில் வலிமை, நேர்கொண்ட பார்வை மற்றும் தற்போது அஜித் நடிக்கும் துணிவு போன்ற படங்களை தயாரித்து வரும் போனி கபூரின் மகன் ஆவார்.
சமீபத்தில் அர்ஜுன் கபூர் தனக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை என்று ஒரு பேட்டியில் கூறி இருந்தார். இந்நிலையில் நடிகை மலைக்கா தன்னுடைய இன்ஸ்டால் பக்கத்தில் சம்மதம் தெரிவித்து விட்டேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அர்ஜுன் கபூரை திருமணம் செய்வதற்கு தான் மலைக்கா சம்மதம் தெரிவித்து விட்டதாக மறைமுகமாக பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் அர்ஜுன் கபூர் மற்றும் மலைக்காவுக்கு 12 வயது வித்தியாசங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.