பிரிட்டனில் முதல் உலகப்போரில் உயிர் தியாகம் செய்த 9 ராணுவ வீரர்களின் உடல், தகுந்த மரியாதையோடு தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
பெல்ஜியத்தில் இருக்கும் Tyne Cot என்னும் ராணுவ கல்லறையில் தகுந்த ராணுவ மரியாதை செய்யப்பட்டு, ஒன்பது ராணுவ வீரர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ராணுவ வீரர்கள் ஒன்பது பேரில், ஏழு வீரர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்திருக்கிறது. அடையாளம் தெரிந்த 7 ராணுவ வீரர்களும் 11வது பட்டாலியனில் சேர்ந்து பணிபுரிந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது.
மேலும், கடந்த 1917 ஆம் வருடத்தில் அக்டோபர் மாதம் பாஸ்செண்டேல் என்னும் போரில் ஒருவர் பின் ஒருவராக சில நாட்களில் உயிரிழந்ததாக கூறப்பட்டிருக்கிறது. இளவரசர் எட்வர்ட் தலைமையில், நல்லடக்கம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பலரும் பங்கேற்றனர்.
கடந்த 2018 ஆம் வருடத்தில் வீரர்களின் சடலங்கள் கண்டறியப்பட்டது. இந்நிலையில் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அவை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ராணுவ வீரர்கள் உபயோகித்த பொருட்களை வைத்து அவர்களின் குடும்பத்தாரை அடையாளம் காணக்கூடிய பணிகள் நடைபெற்றிருக்கிறது.