இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள குஞ்சாண்டியூர் பகுதியில் பெருமாள் கோவில் தெருவில் காவலரான மனோஜ் கியான் என்பவர் வசித்து வருகிறார். அதன்பின் புக்கம்பட்டி அழகாகவுண்டனூர் பகுதியில் ஊர்க்காவல் படைவீரரான அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சாலையில் எதிரே வந்த லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஊர்க்காவல் படை வீரர்ரான அண்ணாமலை என்பவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காவலரான மனோஜ் கியானுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் படுகாயம் அடைந்த காவலரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அண்ணாமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.