முதல் உலகப் போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் கோழைகள் என குறிப்பிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரான்சில் அமையப்பெற்றுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களின் கல்லறைக்கு செல்ல மறுத்ததோடு கோழைகளின் கல்லறைக்கு என்னால் மரியாதை செலுத்த முடியாது என்றும் கூறியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 1918 ஆம் ஆண்டு பிரான்ஸில் வைத்து உயிரிழந்த இராணுவ வீரர்களின் கல்லறைக்கு மரியாதை செலுத்த மறுத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தன்று மழை பெய்ததால் மழையில் நனைந்தால் தனது தலைமுடி பாழாகிவிடும் என அதிபர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய தேர்தல் காலத்தில் அத்தகைய சம்பவம் ஒன்று நடக்கவில்லை என மறுத்ததோடு அது வடிகட்டிய பொய் என்றும் அதிபர் தெரிவித்துள்ளார். அதோடு போர் என்பது கொண்டாடப்பட வேண்டியது அல்ல என்றும் அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார். அதோடு அமெரிக்கா நேச நாடுகளின் பக்கம் எதற்காக தலையிட்டது என்பது குறித்து தனக்கு இதுவரை புரியவில்லை என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதியாக அதிகாரிகளின் வற்புறுத்தலின் பெயரில் ராணுவ வீரர்களின் கல்லறைக்கு அதிபர் சென்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போதைய தேர்தல் களத்தில் பின்னடைவை சந்தித்து வரும் அதிபர் தற்போது ராணுவ வீரர்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தது மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.