Categories
தேனி மாவட்ட செய்திகள்

பணியில் உயிரை விட்ட ராணுவ வீரர்…. 21 குண்டுகள் முழங்க…. மரியாதை செலுத்திய ஆட்சியர்..!!

தீ விபத்தில் பலியான ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தி தகனம் செய்யப்பட்டது. ஆட்சியர் அஞ்சலி செலுத்தினார்.

தேனி பெரியகுளம் பகுதியில் உள்ள வடுகபட்டியில் வசிப்பவர் குருசாமி. இவருடைய மகன் பெயர் ஆறுமுகம். இவர் இந்திய ராணுவத்தில் கடந்த 12 ஆண்டுகளாக பணி செய்து வந்தார். தற்போது கடைசியாக அவர் நாயக் பகுதியில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பதாக 10 வீரர்களுடன் காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர் ஆறுமுகத்திற்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இதனால் ஜம்முவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி 8ஆம் தேதி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து ராணுவ வீரரின் உடல் விமானம் மூலம் கோவைக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் நேற்று ராணுவ வாகனத்தில் அவருடைய சொந்த ஊரான வடுகபட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கே அவருடைய உறவினர்கள் அவருக்கு இறுதி மரியாதை செய்தனர். அதன் பின்னர் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஆறுமுகத்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் ராணுவ உயர் அதிகாரிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வடுகப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். ஆறுமுகத்தின் உடலின் மேல் தேசியக்கொடி பொருத்தப்பட்ட நிலையில் அவருடைய மனைவி பாண்டி ராணியிடம் ஒப்படைக்கப்பட்டது. வடுகப்பட்டி மயானத்தில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் ஆறுமுகத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. ராணுவ வீரரின் இறுதி சடங்கில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |