Categories
உலக செய்திகள்

கரையை நெருங்குற நேரத்துல…. திக்..திக்..சம்பவம்…. பரிதாபமாக இறந்த தொழிலாளிகள்….!!

மலேசியாவிலுள்ள ரப்பர் தோட்டம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிய சட்டத்திற்கு புறம்பாக 50 தொழிலாளர்களுடன் இந்தோனேஷியாவிலிருந்து புறப்பட்ட படகு ஒன்று ஜோஹோர் கடற்கரை பகுதியை நெருங்கும் போது திடீரென கவிழ்ந்துள்ளது.

மலேசியாவிலுள்ள ரப்பர் தோட்டம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிய சட்டத்திற்குப் புறம்பாக இந்தோனேசியாவிலிருந்து 50 தொழிலாளர்களுடன் படகு ஒன்று புறப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த படகு மலேசியாவிலுள்ள ஜோஹோர் என்னும் கடற்கரை பகுதியை நெருங்கும் போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இந்தோனேஷியாவிலிருந்து புறப்பட்ட 50 தொழிலாளர்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

இருப்பினும் படகிலிருந்த 14 பேர் அதிஷ்டவசமாக கடலில் இருந்து நீந்தி உயிர் பிழைத்துள்ளார்கள். ஆனால் படகிலிருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கிய மீதமுள்ள 25 பேரை காணவில்லை என்பதால் மீட்புக்குழுவினர் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள்.

Categories

Tech |