தேர்தல் பிரசாரத்திற்கு சமூக வலைதளத்தின் பங்கு அதிகமாக இல்லை என்று வெளியாகிய ஆய்வு முடிவு அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. சமூக வலைதளங்கள் மூலம் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்று இன்னமும் சொல்லிக் கொண்டு கொண்டு இருக்கிறார்கள். செய்திகள் , பிரச்சாரம் மற்றும் வியாபாரம் என மிகப்பெரிய சந்தையாக சமூக வலைதளம் உள்ளது.நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கூட அனைத்துக் கட்சிகளும் சமூக வலைதளங்களை தங்களது முக்கிய பிரச்சார கருவியாக பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் சுமார் 53 கோடி அளவிற்கு சமூக வலைதளத்தில் மட்டும் விளம்பரங்கள் செய்தாக தெரியவந்துள்ளது. இத்தனை கோடிகளை பணத்தை கொட்டியும் வாக்குகள் எதிர்பார்க்கும் அளவுக்கு சமூக வலைதளங்களில்கிடைக்கவில்லை என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அந்த ஆய்வில் இந்திய வாக்காளர்களில் 64% சமூக வலைதளங்களில் இல்லாதவர்கள், அதை பெரிதளவில் பயன்படுத்தாதவர்கள் என்றும் , சமூக வலைத்தளத்தை பொழுது போக்குக்காக மட்டும் பயன்படுத்துபவர்கள் என்று ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.