Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அப்போ நீங்க…. டீ வியாபாரி, கிடையாதா ? போலீசுக்கு டப் கொடுத்த பெண் …!!

திருச்சியில் டீ கேனில் சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கள்ளசாராயம் காய்ச்ச தடை விதிக்கப்பட்டதோடு, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். ஆனாலும் சிலர் சட்டத்த்தை மதிக்காமல் போலிஸுக்கு தெரியாமல் இது போன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தற்போது திருச்சியில் நடைபெற்று சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜிநகர் பகுதியில் உள்ள வீடுகளில் கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்றதை போலீசார் கண்டுபிடித்து தடுதந்திருந்தனர். இந்த சம்பவம் நடைபெற்று சில வாரங்களில் மீண்டும் நூதனமான முறையில் கள்ளச்சாராயம் விற்பனை தலைதூக்கி உள்ளது என பல புகார்கள் போலீசுக்கு பறந்தது.

இரு நாட்களுக்கு முன்பு கூட திருச்சி – திண்டுக்கல் சாலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, அங்கே டீ விற்பனை செய்த பெண்ணிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணை காவல்நிலையத்துக்கு வரும்படி சொல்லிய போலீசார் டீ கேனை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

போலீஸ் விசாரணைக்கு வர சொல்லியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அந்த பெண் வராததால் சந்தேகம் அடைந்த போலீசாருக்கு டீ கேனில் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கேனில் டீக்கு பதிலாக சாராயம் நிரப்பி அந்த பெண் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடிய போலீசாருக்கு ராம்ஜிநகர் பகுதியில் வசித்த 60 வயதான விஜயாதான் அந்த பெண் என்று தெரிந்ததும் உடனே அந்த பெண்ணை கைது செய்தனர்.

Categories

Tech |