Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிப்போடு செம! மாஸ்… “பாகுபலி” இயக்குனருடன் இணையும் நடிகர் கார்த்தி…. எந்தப் படத்தில் தெரியுமா….?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். நடிகர் கார்த்தி தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்தார். அதன்பின் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நடிகர் கார்த்தி தற்போது நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இதனையடுத்து நடிகர் கார்த்தி நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜமவுலி நடிகர் மகேஷ்பாபுவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் கார்த்தி முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். அதன் பிறகு பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் முக்கியமான வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். மேலும் நடிகர் கார்த்தி நடித்த தோழா திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கார்த்திக்கு தெலுங்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |