Categories
தேசிய செய்திகள்

இதுவரை 17.26 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது… மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு…!!

இந்தியாவில் இதுவரை 17.26 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு மாநிலங்களும் கடுமையாக எச்சரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 17 கோடியே 26 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு கோவாக்சின் தடுப்பூசிகள் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வருவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |