அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகரத்தில் இருக்கும் ரயில் தண்டவாளங்களில் தீ வைக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் அங்கு, ரயில் சேவைகளை நடத்தி வரும் மெட்ரா என்ற போக்குவரத்து நிறுவனம், பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் தண்டவாளங்களில் நெருப்பு வைக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறது.
இதனால் தண்டவாளங்களில் கிடக்கக்கூடிய பனி உருகி, ரயில் செல்வதற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.