காலை 8 மணி வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மாசி மாத தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சை பெரிய கோவில் கோபுரம் தெரியாத அளவிற்கு காலை 8 மணி வரை பனிப்பொழிவு நீடித்துள்ளது. மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம் கோபுரம் மற்றும் மேம்பாலங்கள் போன்றவை பனியால் சூழ்ந்து காணப்பட்டுள்ளது.
இவ்வாறு காலை 8 மணி வரை அதிக அளவு பனிப்பொழிவு காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி செய்துள்ளனர். இதனால் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.