Categories
சினிமா தமிழ் சினிமா

“சினேகா-பிரசன்னா விவாகரத்து”….. உண்மையை போட்டுடைத்த பயில்வான் ரங்கநாதன்…. என்ன சொன்னாரு‌ தெரியுமா?…!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், சமீப காலமாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூடிய விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரசன்னாவும், தானும் ஒரே மாதிரியான உடை அணிந்த புகைப்படத்தை சினேகா தன்னுடைய இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் சினேகா மற்றும் பிரசன்னா விவாகரத்து குறித்து பேசி உள்ளார்.

அவர் பேசியதாவது, சினேகா மற்றும் பிரசன்னா விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற தகவலில் உண்மை கிடையாது. அது வெறும் வதந்தி என்று கூறியுள்ளார். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் பொய் சொல்ல மாட்டார் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் நல்லா இருக்கும் குடும்பத்திற்குள் யாரு தேவையில்லாமல் நெருப்பை மூட்டி விடுகிறார்கள் மற்றும் குட்டையை குழப்பி விடுகிறார்கள் என்றும் ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

Categories

Tech |