Categories
உலக செய்திகள்

பாத்ரூம் சென்ற நபர்… கோப்பையில் தலையை நீட்டிய பாம்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்காவில் கழிவறை ஒன்றில் தலையை நீட்டியபடி பாம்பு ஒன்று வரும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் ஒருவரது வீட்டில் அமைந்துள்ள கழிவறையில் இருக்கும் கோப்பையில் தலையை நீட்டியபடி பாம்பு ஒன்று வருகிறது. அந்தப் பாம்பு விஷ தன்மை அற்றது என அறியப்பட்டாலும் எப்படி அது இதனுள் வந்து இருக்கும் என்பது பற்றிய தகவல் இல்லை. இந்த காணொளி சமூக வலை தளத்தில் பதிவிட்டு சில மணி நேரங்களிலேயே ஏராளமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

அந்த காணொளியில் கழிவறையில் இருந்த கோப்பை வழியாக வெளியே வருவதற்கு பாம்பு தலையை தூக்கி உள்ளது. அதனை கோல்ப் குச்சி மூலமாக வெளியே எடுப்பதற்கு முயற்சி நடந்துள்ளது. முடியாத நிலையில் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்தவர்கள் பாம்பை பிடித்து வெளிப்பகுதியில் விட்டதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது. இது விஷமற்ற பாம்பாக இருந்திருந்தாலும் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு இவ்வாறு வந்தால் உயிர்பலி ஏற்படுவதற்கான வாய்ப்பு கூட உள்ளது.

Categories

Tech |