9 1/2 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் கூட்டுறவு விற்பனை சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்கத்தில் தொழிலாளர்கள் உருளைக்கிழங்குகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்குள்ள புதர்களுக்கு இடையே பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 9 1/2 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து சாக்குப்பையில் போட்டு கட்டியுள்ளார். அதன் பிறகு பிடிபட்ட பாம்பு மேட்டுப்பாளையம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து வனத்துறையினர் அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.