பாம்பு கடித்ததால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த டோனிசாபு தனது நண்பரான காட்டுராஜாவை பார்ப்பதற்காக கம்பத்திற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் காட்டுராஜா அவருக்கு சொந்தமான முந்திரி தோட்டத்தில் இருந்ததால் டோனிசாபு அந்த பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது டோனி பாபுவை பாம்பு கடித்துள்ளது. உடனே அவர் அக்கம் பக்கத்தினரால் கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனளிக்காத காரணத்தினால் டோனிசாபு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.