Categories
மாநில செய்திகள்

Smartphone பயனாளர்களுக்கு…. தமிழக காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

உலகெங்கிலும் மக்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகளும், மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. இதனை தடுப்பதற்கு தமிழக காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள லொக்கேஷன் மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

# வலுவான பாஸ்வேர்ட் பாதுகாப்பு அமைப்பு இருப்பதை சரி செய்ய வேண்டும்.

# தேவையில்லாத நேரங்களில் ஜிபிஎஸ் லொகேஷன் சேவைகளை முடக்க வேண்டும்.

# கேமரா லொக்கேஷன் சேவையை முடக்க வேண்டும்.

# சமூக வலைதளங்களில் செக்-இன் / செக் -அவுட் விவரங்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |