Categories
தேசிய செய்திகள்

பல மாதங்களாக… பாலியல் வன்கொடுமை… சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு …!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு ஆதரவற்றோர் விடுதியல் பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பல மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்த காரணத்தால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள அமீன்பூர் பகுதியில் மாருதி என்ற  ஆதரவற்றோர் விடுதி தனியாரால் நடத்தப்பட்டு  வருகிறது. இந்த விடுதியில் அதிக அளவில் ஆதரவற்றோர் சிறுவர், சிறுமிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆதரவற்ற இல்லத்தை விஜயா என்ற பெண் நிர்வாகம் செய்து வருகிறார். இந்த நிலையில் அங்கு அடிக்கடி வந்து போகும்  வேணுகோபால் என்ற நபர் விஜயா மற்றும் அங்கு வேலை செய்யும் மற்றொரு நபர் இவர்களின்  உதவியுடன் அங்கு வசிக்கும் சிறுமி ஒருவர் மீது சென்ற பல மாதங்களாக பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை மாருதி விடுதி நிர்வாகம் அச்சிறுமியின் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளது. அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டார்.  சிறுமியின் உறவினர்கள் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமி இறப்பதற்கு முன்  போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி அளித்த வாக்குமூலத்தின் மூலம்  வேணுகோபால், விடுதி நிர்வாகி விஜயா உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |