குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற 12 வயது சிறுவன் இருந்துள்ளார். இந்நிலையில் காலை நேரத்தில் சைக்கிளில் வீட்டை விட்டு வெளியே சென்ற சந்தோஷ் நீண்ட நேரமாகியும் திரும்பிவரவில்லை. இதனால் அதிர்ச்சிஅடைந்த அவரது பெற்றோர் சந்தோசை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது கீழப்பூசாரிப்பட்டியில் இருக்கும் குளத்தின் கரையில் சந்தோசின் சைக்கிள் நின்றதை அவரது பெற்றோர் பார்த்துள்ளனர்.
மேலும் அதன் அருகில் சந்தோஷின் செருப்பு மற்றும் ஆடைகள் இருந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக குளத்திற்குள் இறங்கி தேடிப் பார்த்தபோது சிறுவன் சந்தோஷ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்ததுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தோஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.