மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதால் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வளதாடிப்பட்டி பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கேசவன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மாலதியும் கேசவனும் மோட்டார் சைக்கிளில் இலுப்பூரில் நடக்கும் வாரச் சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளனர். இவர்கள் வடுகன் குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே மாடு ஒன்று நடந்து சென்றுள்ளது. அப்போது மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக கேசவன் சடன் பிரேக் போட்டுள்ளார்.
இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த’ விபத்தில் படுகாயமடைந்த கேசவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் படுகாயமடைந்த மாலதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கேசவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.