Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காற்றாடியை பறக்க விட்ட சிறுவன்…. உடல் கருகி பலியான சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை பகுதியில் சகுபர் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்துல் வாசிம் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் வாசிம் தனது வீட்டு மாடியில் நின்று கொண்டு காற்றாடியை பறக்க விட்டுள்ளார். அப்போது திடீரென காற்றாடியின் நூல் அறுந்து வீட்டிற்கு பின்புறம் இருக்கும் ரெயில்வே யார்டில் மின்சார ரெயில்கள் செல்லும் உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கி விட்டது.

இதனால் அங்கு நிறுத்தியிருந்த ரயில் பெட்டியின் மீது ஏறி அப்துல் வாசம் கம்பியில் சிக்கியிருந்த காற்றாடியை எடுக்க முயன்ற போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் உடல் கருகி தூக்கி வீசப்பட்ட சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அப்துல் வாசிம் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |