Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvPAK : அய்யய்யோ போச்சே…… “டிவியை உடைக்கும் ரசிகர்கள்”….. பாகிஸ்தானை கலாய்க்கும் மீம்ஸ் வைரல்..!!

ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், பாகிஸ்தானை கலாய்த்து வெளியிடப்பட்டுள்ள மீம்ஸ் வைரலாகி வருகிறது.

ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்தது. இலங்கை அணியில் நிஷாங்கா 8, குஷால் மெண்டிஸ் 0, தசுன் ஷனாக 2 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து தடுமாற அந்த அணி 8.5 ஓவரில்  58/5 என இருந்தது. இதனால் இலங்கை அணி 100 ரன்களுக்குள் சுருண்டு விடும் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் 6ஆவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஹசரங்காவும், ராஜபக்சேவும் அணியை தூக்கி நிறுத்தினர். சிறப்பாக ஆடிய ஹசரங்கா 5 பவுண்டரி, ஒரு சிக்சர் உடன் 36(21) ரன்களில் ஆட்டம் இழந்தாலும், இறுதிவரை நின்ற ராஜபக்சே 6 பவுண்டரி, 3 சிக்ருடன் 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து சிறப்பான பினிஷிங் கொடுக்க 170 ரன்களை குவித்தது இலங்கை அணி..

இதையடுத்து 171 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும்  கேப்டன் பாபர் அசாம் இருவரும் களமிறங்க, மதுஷன் வீசிய 4ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் பாபர் அசாம் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் பக்கர் ஜமான் 0 ரன்னில் ஆட்டம் இழந்ததால் பாகிஸ்தானுக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது.. 22/2  என பரிதவித்த அந்த அணிக்கு 3ஆவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது.

வழக்கம்போல முகமது ரிஸ்வான் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அவருக்கு ஜோடியாக இப்திகார் அகமது (32 ரன்கள்) போராடி ஆட்டம் இழந்தார். மேலும் முடிந்தவரை போராடி பொறுமையாக ஆடிய முகமது ரிஸ்வான் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் உடன் 55(49) ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டம் இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. அதன்பின் வந்த வீரர்களும் வந்த வேகத்தில் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியதால் 20 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழந்து பாகிஸ்தான் அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக மதுசன் 4 விக்கெட்டுகளும், ஹசரங்கா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 6 ஆவது முறையாக ஆசிய கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது. இலங்கை அணி கோப்பையை வென்றதற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.. ஏனென்றால் ஐசிசி தரவரிசை பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கும்  அந்த அணி இளம் படைகளை வைத்து முக்கிய போட்டியில் தைரியமாக விளையாடி 6ஆவது முறை ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கி உள்ளது.

பொருளாதார நெருக்கடியால் இலங்கை சிக்கித்தவித்து வரும் நிலையில், ஆசிய கோப்பையை வென்றுள்ளதால் அந்த நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.. அவர்கள் வெற்றியை கொண்டாடிவரும் அதே நேரத்தில் தோல்வியால் பாகிஸ்தான் ரசிகர்கள் துவண்டு போய் சோகத்தில் உள்ளனர்.. அதே சமயம் சில ரசிகர்கள் இப்படி மோசமாக விளையாடி தோற்றுவிட்டார்களே என்று ஆத்திரத்தில் என்ன செய்ய வேண்டும் செய்வதென்று தெரியாமல் புலம்புகின்றனர்.. இதற்கிடையே பாகிஸ்தானை கலாய்க்கும் விதமாக மீம்ஸுகளும் இணையத்தில் பரவி வருகிறது. அதில், ஒரு ரசிகர் ஒருவர் இந்த போட்டியை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தபோது போல இருக்கிறது. இறுதியில் அனைத்து விக்கெட்டையும் இழந்து பாகிஸ்தான் தோல்வியடைந்த போது ஆத்திரத்தில் கட்டையால் டிவியை உடைக்கிறார். இதேபோல பல மீம்ஸ் வைரலாகி வருகிறது.

https://twitter.com/motive__quote/status/1569251807897227264

https://twitter.com/Zargaie/status/1568296706348826625

 

 

Categories

Tech |