சிறந்த விமான நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் விமான நிலையங்களின் பெயர்கள் கொண்ட நடப்பு ஆண்டிற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை விமான நிலைய மதீப்பிடு நிறுவனமான skyratx வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 8 வருடங்களாக முதலிடத்தில் இருந்த சிங்கப்பூர் விமான நிலையம் தற்போது பின் சென்றது.
இதற்கு கொரோனா தொற்று பரவலும் ஒரு’ முக்கிய காரணமாகும். அதிலும் விமான நிலையத்தில் இருக்கும் செக்கிங், குடிவரவு, பாதுகாப்பு, தூய்மை, உணவகங்கள், பார்கள் மற்றும் ஊழியர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் போன்றவற்றின் அடிப்படையிலேயே இந்த பட்டியல் வெளியாகியுள்ளது. இப்பட்டியலில் நூறு விமான நிலையங்கள் உள்ளன.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து காரணங்களும் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பட்டியலில் முதல் 10 இடங்களில் 7 விமான நிலையங்கள் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவையாகும். குறிப்பாக வடஅமெரிக்க விமான நிலையங்கள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை.
இந்த ஆண்டும் பட்டியலில் முதல் 20 இடங்களில் ஐரோப்பாவை சேர்ந்த விமான நிலையங்கள் அதிக அளவில் உள்ளன. அதிலும் முதல் 10 இடங்களில் ஐரோப்பாவைச் சேர்ந்த மூன்று விமான நிலையங்கள் உள்ளன.ஆனால் இது கடந்த ஆண்டை ஒப்பிடும்பொழுது முன்னேற்றம் கண்டுள்ளது.
மேலும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையம் முதல் 5 இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது அது 22வது இடத்தை பிடித்துள்ளது. இறுதியாக கடந்த ஆண்டு 13 வது இடத்தில் இருந்த வான்கூவர் சர்வதேச விமான நிலையம் தற்பொழுது 24 வது இடத்திற்கு சென்றுள்ளது. குறிப்பாக முதல் இடத்தில் கத்தாரின் Doha’s Hamad International Airport உள்ளது.