பிரான்ஸ் நாட்டில் 2 அடி ஆழத்துக்கு உறைபனியில் தலை கீழாக புதைந்து மாட்டிக் கொண்ட இளம் வயது பெண் ஒருவரை பனிச்சறுக்கு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் இங்கிலாந்து வீரரான வில் ஃபீல்ட் (Will Field), என்பவர் பனிச்சறுக்கு பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது தூரத்தில் 2 கால்கள் மட்டும் அசைந்து கொண்டிருப்பதை பார்த்து உடனே அருகில் சென்றார். அங்கு உறைபனியில் பெண் ஒருவர் தலைகீழாக சிக்கி கொண்டிருப்பதை கண்டார். ஆம், அவரது தலை மற்றும் உடலின் பாதி உறைபனியில் புதைந்து விட்டதால் வெளியேறமுடியாமல் காலை ஆட்டிக்கொண்டே தவித்தார்.
இதையடுத்து சற்றும் யோசிக்காத வில் ஃபீல்டு தன்னிடம் இருந்த மண்வெட்டியை இணைத்து (Spade) மீட்புப் பணியை வேகமாக துரிதப்படுத்தினார். மண் வெட்டியால் வேகமாக தோண்டிக்கொண்டிருந்த போது மற்றொரு வீரர் ஒருவரும் வேகமாக வந்து கைகளால் தோண்டி உதவி செய்தார் .
இருவரும் சேர்ந்து உறைபனியை அகற்றி உள்ளே சிக்கிதவித்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். ஒரு வேளை அவர்கள் வரவில்லை என்றால் மூச்சு திணறி அப்பெண் உயிரிழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். பனிச்சறுக்கு விளையாடும் போது இப்படி ஏதாவது விபரீதம் நடக்கும். இது போன்ற விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.