Categories
சினிமா

SK 20 இந்த படத்துல இதுக்கு பஞ்சமே இருக்காது போல…. பிரபலத்தின் பதிவால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

சிவகார்த்திகேயன் 20 படக்குழுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் SK20 படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் நேரடி தெலுங்கு பட உலகில் அடி எடுத்து வைக்க உள்ளார்.இப்படத்திற்கு தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளரான தமன் இசையமைக்கின்றார். மேலும் தமன் படத்தைப்பற்றிய தகவல் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அதில் அவர் பதிவிட்டது என்னவென்றால்,” நேற்று இரவுதான் நான் மிக அதிகமாக சிரித்த முதல் இரவு, இந்த பூமியில் உள்ள அறிவுள்ள மனிதர்களில் டைமிங்கில் சிறந்து விளங்கும் டார்லிங்ஸ் உடன்”, என சிவகார்த்திகேயன், இயக்குனர் அனுதீப், நடிகர் நவீன் மற்றும் படக்குழுவுடன் இருக்கும் புகைப்படங்களுடன் கூடிய பதிவை வெளியிட்டார். காமெடியை வாரிவாரி வழங்கும் சிவகார்த்திகேயனும், காமெடி படத்தை எடுத்து வெற்றிகண்ட இயக்குனர் அனுதீப்பும் இணையும் இப்படம் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்

Categories

Tech |