Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ”கடமையை செய்”…. சூப்பரான வீடியோ பாடல் ரிலீஸ்…. நீங்களும் பாருங்க….!!!

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ”கடமையை செய்” படத்தின் வீடியோ பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ். ஜே. சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, தற்போது இவர் இயக்குனர் வெங்கட்ராகவன்  இயக்கத்தில் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ”கடமையை செய்”.

எஸ்.ஜே.சூர்யா - யாஷிகா நடிக்கும் 'கடமையை செய்' | SJ Suryah Yashika Anand s  Kadamayai Sei begins today – News18 Tamil

இந்த படத்தில் கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜெயச்சந்திரன், மொட்டை ராஜேந்திரன், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அருண்ராஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜூன் 24ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான வீடியோ பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

Categories

Tech |