Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல முன்னணி நடிகருக்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா……. வேற லெவல் கூட்டணி…..!!!

விஷால் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ். ஜே. சூர்யா. இவர் சமீபத்தில் இறைவி, மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றார். மேலும், சமீபத்தில் வெளியான ”மாநாடு” திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

விஷாலுக்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா - SJ Surya to act as villain for Vishal

இதனையடுத்து, இவர் அடுத்தடுத்த படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் விஷால் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |